Tamil Bloggers Database

Sunday, July 18, 2004

தமிழ் வலைப்பதிவுகள் பட்டியல்

அன்புள்ள இணையத்தமிழ் வாசகர்களே,
 
தமிழ் வலைப்பதிவுகளை வரிசைப்படுத்தி, மதி கந்தசாமி www.tamilblogs.blogspot.com என்ற ஒரு தளத்தில் பட்டியலிட்டு நிர்வகித்து வருவதை அறிவோம்.  இந்தப் பட்டியலை நாம் அனைவரும் தினமும் பயன்படுத்தி வருகிறோம்.  எண்ணிக்கையில் வளர்ந்து வரும் தமிழ் வலைப்பதிவுகளை வாசிப்பதற்கு வசதியாக இந்த வலைப்பதிவுகளின் செய்தி ஓடைகளின் தொகுப்பையும் (OPML கோப்பாக) வழங்கினால் நன்றாக இருக்குமே என்று பலரும் எண்ணியிருந்தோம். அந்த வசதியை அளிக்கும் முகமாகவே ஒரு தரவுத்தளத்தில் (Database) இந்தப் பட்டியலை சேமிக்க சில மாதங்களுக்குமுன் முயற்சி எடுக்கப்பட்டு, பலரும் தங்கள் வலைப்பதிவுகளின் விபரங்களை இதில் (http://www.s93039450.onlinehome.us/tinc?key=yALam1JU&formname=Tamilbloggers) சேமித்தும் இருக்கிறோம்.
 
இயங்கும் வலைப்பக்கங்கள் என்ற தொழில் நுட்பத்தை வைத்து இதைச் செய்தால்தான், தானாக இந்த OPML கோப்பு தயாராகி, என்றும் புதிதாய் இருக்கும். இன்று வரை இந்தத் தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டுள்ள 108  வலைப்பதிவுகளின் பட்டியலை, இந்தத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, அவற்றின் OPML கோப்பை பெற்றுக்கொள்ள வசதியுடன் இங்கு ( http://www.thamizmanam.com/tamilblogs/tamilblogs.php ) அமைத்துள்ளேன். இதே தொழில்நுட்பத்தைக் கொண்டு, தரவுத்தளத்தில் மேலும் தகவலைச் சேர்க்கவும் ஒரு படிவம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அது தயாரானவுடன், இந்தப் பட்டியலில் புதிய தகவலைச் சேர்த்தவுடன், சுடச்சுட இற்றைப்படுத்தப்பட்ட OPML கோப்பு கிடைக்கும், பட்டியலிலும் புதிய தகவல் அப்போதே இடம்பெறும்.
 
இந்தப் படிவம் தயாரானவுடன், மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிடப்படும். அதுவரை, பழைய படிவம் ( http://www.s93039450.onlinehome.us/tinc?key=mfopO9DA&formname=Tamilbloggers ) மூலம் புதிய தகவல் எதையும் சேர்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த 108-லும்கூட சில தவறுகள் இருப்பதை கண்டேன். அப்படியான தவறுகளை இந்த செய்திக்கான மறுமொழியாகக் கொடுத்தால், அவற்றைக் களைந்து செம்மைப்படுத்துவேன்.
 
இதுமட்டுமல்லாமல், இன்னும் நிறைய வசதிகளுடன் இந்த வலைப்பதிவுகள் தகவல் தளம் மெருகேறப்போகிறது. பொறுத்திருங்கள்.
 
அன்புடன்,
-காசி

மேம்படுத்தல் பற்றிய விபரம்:
  1. blogspot.com சேவையைப் பயன்படுத்தும் வலைப்பதிவுகள் செய்தி ஓடை முகவரியை ஏற்கனவே கொடுத்திராவிட்டாலும் (அல்லது தவறாகக் கொடுத்திருந்தாலும்) தானாகவே /atom.xml என்று சேர்த்து தயாரித்துக்கொள்ளும். (rss செய்தி ஓடையை அளிக்கும் பத்ரியின் வலைப்பதிவு போன்றவற்றை விளங்கிக்கொண்டு விலக்கு அளிக்கப்படும்).
  2. தலைப்பு, அல்லது விளக்கத்தில் & போன்ற எழுத்துக்களால் xml பிழை வந்தது, அதுவும் சரி செய்யப்பட்டுள்ளது.
  3. பட்டியலில் வரிசைக்கிரமம் ஒவ்வொரு முறையும் மாறி மாறி வரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சில பதிவுகளே எப்போதும் முதல் பக்கம் தெரிந்துகொண்டிருந்தது போய், எல்லாருக்கும் சம முக்கியத்துவம் கிடைக்கும்.
 
இன்னும் நண்பர்கள் ஏதும் ஆலோசனை இருந்தாலும் பகிர்ந்துகொள்ளலாம்.
 
நன்றி.
 
அன்புடன்,
-காசி
ஞாயிறு மாலை 6:25

 

7 Comments:

  • நல்லது காசி.

    தற்போதைய பதிவில் ஒருவர் தனது தளத்தின் முகவரியை மாற்றிக் கொண்டால்
    அதை தானே இந்த அட்டவணையில் மாற்றிக் கொள்வதற்கான சாத்தியம் இருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

    உதாரணமாக ஈழநாதனின் ஈழத்து இலக்கியம் முதலில் blogspot.com இல் இருந்தது. இப்போது yarl.net இல். இதே போல திவாகரனின் நிலாமுற்றம்... இன்னும் பல.
    ஆனால் பட்டியலில் இன்னும் பழைய முகவரியே உள்ளது.

    அவைகள் இப்புதிய முறையில் நிவர்த்தி செய்யப்படும் என நம்புகிறேன்.

    நட்புடன்
    சந்திரவதனா

    By Blogger Chandravathanaa, at 4:41 AM  

  • ஆம், சந்திரவதனா.

    அந்த வசதியும் இருக்கும். அது மட்டுமல்லாமல், வலைப்பதிவர் பெயர், வலைப்பதிவின் தலைப்பு, பதிவு தொடங்கிய நாள் என்ற பலவித வரிசைக் கிரமமாகப் பட்டியலை அடுக்கும் (sort) வசதியும், OPML கோப்பு தயாரிக்கும்போது, தேவைப்படும் வலைப்பதிவுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு மட்டும் தயாரித்துக்கொள்ளும் வசதியும் வரும். இன்னும் நிறைய யோசனைகள் மனதில் இருக்கின்றன. சும்மா வாய்கொடுத்துவைக்க வேண்டாமே என்று இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். மேற்சொன்னவையே ஒவ்வொன்றாகத்தான் செய்யப்போகிறேன்.

    அன்புடன்,
    -காசி

    By Blogger Kasi Arumugam, at 9:14 AM  

  • அன்புள்ள நவன் பகவதி,

    செய்துவிட்டேன்.

    அன்புடன்,
    -காசி

    By Blogger Kasi Arumugam, at 10:19 AM  

  • நண்பர்களே,

    OPML கோப்பு தயாரிக்கும்போது, blogspot சேவை பயன்படுத்துவோரது செய்தி ஓடை முகவரி மட்டும், தானாகவே அவர்கள் தள முகவரியுடன் '/atom.xml' என்று சேர்ந்து வரும்படி அமைத்திருந்தேன். பலரும் இந்தத் தகவலைத் தராமல் அல்லது தவறாகத் தந்திருந்ததால், இது ஒரு சமர்த்துத் தனம் (smart) என்று நினைத்து செய்தேன். ஆனால் பத்ரியின் blogspot பதிவு (போன்றவை) rss செய்தி ஓடையை அளிப்பதால், இந்த சமர்த்துக் காரியம் சொத்தையாகிப் போனது. எனவே இப்போது அதையும் சோதித்து சரி செய்யுமாறு அமைத்திருக்கிறேன். எனவே இந்த மறுமொழிக்கு முன் கோப்பை இறக்கிக் கொண்டவர்களுக்கு பத்ரியின் பதிவு சரியாகக் காட்டப்படாது. புதியதை இறக்கிக்கொள்ளுங்கள்.

    அன்புடன்,
    -காசி

    By Blogger Kasi Arumugam, at 10:27 AM  

  • //
    outline type="rss" title="thulithulijai" description="kavithai & some thoughts........" xmlUrl="http://yarl.net"
    htmlUrl="http://paranee.yarl.net"
    //

    & in the attribute value makes the XML invalid. Is it possible to change "&" to "&" + "amp;" (Commenting system converts the ampersand symbol amp; entity to &, so i have written with +) before setting the attribute value?

    By Blogger சத்யராஜ்குமார், at 12:44 PM  

  • Dear Sathyarajkumar,

    Thanks for the clue. I improved the script to substitute the html long code for '&' as suggested by you. Now it validates as proper xml. Please check and let me know.

    anbudan,
    -Kasi

    By Blogger Kasi Arumugam, at 1:40 PM  

  • It is working fine now. You may also have to check for greater than & less than symbols to replace with equivalent HTML entities. If some one uses those symbols in their description the xml would face the same problem.

    Thanks,
    -sathyarajkumar

    By Blogger சத்யராஜ்குமார், at 2:36 PM  

Post a Comment

<< Home